மரணமும்....நரகவேதனையும்
நேற்று [17/2/2011]மாலை 4.30 மணிக்கு பேரன் முஹமத் ரோஷனுடன் விளையாடிக்கொண்டு,கவனக்குறைவாக ஒரு சப்போட்டா பழத்தை சாப்பிட ஒரு கொட்டை தொண்டையை குத்தி கிழித்து விட்டது..தாங்கமுடியாத வலியின் காரணமாக,கொட்டை தொண்டையில் சிக்கிக்கொண்டது என்று நினைத்து என்டோஸ்கோபி மருத்துவரை சந்திக்க அவர் ENT-மருத்துவரிடம் அனுப்பினார்.கொட்டை தொண்டையில் இருப்பதற்கு வாய்பில்லை.. தேவைபட்டால் என்டோஸ்கோப் எடுத்துகொளுங்கள் என அனுப்பி விட்டார்.....இதுதான் நடந்தது...
தஹ்தீர்.
நடந்த விஷயம் சாதாரண நிகழ்வா? அல்லது எல்லாம ஏற்கனவேமுடிவு
செய்யப்பட்டவையா?
“கவனக்குறைவால் நடந்தவைகள்” இது எமது மனைவியின் வாதம..!
நிச்சயம் இல்லை...அந்த பிரபஞ்ச சர்வாதிகாரி எமக்களித்த தண்டனை...!
மரணம்:
மலக்குள் மவ்த்தை [உயிரை வாங்கும் வானவர்] சந்திக்கவில்ல. ஆனால் மரணத்தின் எல்லையில் ஒரு நொடி தத்தளித்தது உண்மையே..அந்தகொட்டை மூச்சுக் குழாயில் ஏறிருயிந்தால் ...அல் பாத்திஹாதான்.
அந்த பிரபஞ்ச சக்கரவர்த்தி எதைகொண்டும் தனது வல்லமையை நிருபிக்கமுடியும்..
ஒருவனை பஸ்ஸை கொண்டும் உயிரை வாங்க முடியும்...இதை போன்ற சாதாரண சிறிய கொட்டையை கொண்டும் ... ஏக இறைவா...நன்றி நன்றி... ஆனால்
உணவு:
ஒரு மனிதனுக்கு தவணை காலம் வந்துவிட்டால் அவனுக்கு அளிக்கப்படும் உணவுகள் நிறுத்தப்படும். எனக்கும் 24 மணி நேரம் உணவுகள் முற்றிலும் மறுக்கப்பட்டன.
நரக வேதனை:
வேதனை செய்ய பணிக்கப்பட மலக்காள் ஒருவனின் தலை சிதறடிக்கப்படும்...மீண்டும் தலை தானே சரியாகுமாம்...மீண்டும்...மீண்டும் வேதனை செய்யப்படுமாம்...
எனக்கும் ஒவ்வொரு நொடியும் ... ஒவ்வொருமுறை எச்சில் முளுங்கும்போதும் ஒரு ஈட்டி என் தொண்டையை குத்திக்கொண்டே இருந்தது
எம்பெருமானார்[ஸல்] அவர்களின் வழிமுறை:
பெருமானார் வாழை பழத்தை எப்படி சாப்பிட்டார்கள்..? அணைத்து விசயங்களுக்கும் அவர்களின் முன்மாதிரி இருக்கிறதே பின்பற்றினேனா....இல்லையே...
யா அல்லாஹ் உம்மிடம் ஓர் கேள்வி..?
எந்த பாவத்தை கழுவி என்னை சுத்திகரிக்க இந்த தண்டனை ?
இறைவா என்னை முளுமையக்கிவிடு.
No comments:
Post a Comment