Friday, December 27, 2024

பூம்பாறை விஜிபி கம்பெனிக்கு நிலம் கொடுத்த வழக்கு.( 1 )




SKS குடும்ப அன்பானவர்களுக்கு முகமது சேட் எழுதும் கடிதம், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..


https://www.facebook.com/share/v/14fUDEP4CN/
1. பூம்பாறை வளையங்கள் புலத்தில் அத்தா/ அம்மா,  ஷேக் முகமது ராவுத்தர் குல்சன் பீவி இருவர் பெயரில் 6.20 ஏக்கர் நிலம் இருந்ததும், அந்த நிலத்தை சென்னையை சேர்ந்த வீ.ஜி. பி கம்பெனிக்கு ஒரு பவர் பத்திரத்தின் மூலமாக அத்தா அம்மா இருவரும் இணைந்து கொடுப்பல், வாங்கல் வைத்திருந்ததும் தாங்கள் அனைவரும் அறிந்ததே.

2.  அத்தா அம்மா இறந்ததும் அவர்கள் கொடுத்த பவர் பத்திரம் செயலிழந்த நிலையில், விஜிபி கம்பெனி வேறு சில நபர்களுக்கு அந்த நிலத்தை விற்றதும், நிலத்தை வாங்கிய நபர்கள் மேற்கண்ட நிலத்தை சுத்தம் செய்து, அதில் இருந்த மரங்களை வெட்டுவதற்கு முயற்சி செய்ததை அறிந்த நான், கடந்த நான்கு ஆண்டு காலமாக நிலத்தை மீட்டெடுக்க சட்டப்படி  போராடி வருவதும் தாங்கள் அனைவரும் அறிவீர்.
3. என்னுடைய வயது, உடல்நிலை மற்றும் நமது (SKS)குடும்ப வாரிசுகள் பல்கி பெருகி இருக்கும் சூழலில் கடந்த ஆறு மாதமாக தீவிர யோசனைக்கு பின், நம் குடும்ப வாரிசுகள் அனைவரின் நலன் கருதி என் மனதிற்கு நல்லது எனதோன்றிய ஒரு முடிவை எடுத்துள்ளேன்.
4. அதாவது, வாரிசுரிமை அடிப்படையில் எனக்குச் சேர வேண்டிய பாகத்தை அல்லது பங்கை நான் எனது சொந்தச் செலவில் போராடி எடுக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் நல்லதோர் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.
5. இதன் அடிப்படையில் எனக்கு தெரிந்த ஒரு நண்பர் பெயரில் என்னுடைய பாகத்தை மட்டும் ஒரு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்து அதை பதிவு செய்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக காத்திருந்தும் அந்தப் பவர் பத்திரத்தை பதிவு செய்ய முடியவில்லை. தொடர்ந்து முயற்சி பண்ணுவோம். 
6. இந்த வழக்கு சம்பந்தமாக நடைபெறும் அனைத்து விஷயங்களையும் அப்போது தங்களுக்கு தெரிவிப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு தங்கள் பிரியமுள்ள எஸ் முஹம்மது சேட்.
28/12/2024.

No comments:

Post a Comment