9/1/2011
நேற்று நடந்த நாடகம்:
கபாவை கட்டிய நபியின் பெயர் கொண்ட,சென்னையில் வசிக்கும் எமது கோடிஸ்வர நண்பர் தமது ஒரு இடத்தை விற்பனை செய்ய குறித்த நேரம் மாலை ஆறு மணி.எம்மை தவிர்த்து மாற்றுமத ஆறு நபர்கள் எட்டு மணி நேரம் காத்திருந்தும் நண்பர் பொய் சொல்லி ஏமாற்றி விட்டார்.
ஒரு முஸ்லிம்க்கு இந்த செயல் ஆகுமானதா ? இதுவே இன்றைய .....சிந்தனை.
5.40 மணிக்கு கொஞ்சம் தாமதமானலும் நான் வந்து விடுவேன்...6.30 மணிக்கு ஒரு டீ சாப்பிட்டுவிட்டு தாமதியிங்கள்....8.10 க்கு...டயர் பஞ்சர் வரமுடியாது...இவை அனைத்தும் சென்னையில் இருந்து நீர் கூரிய வார்த்தைகள்
ஏன் இந்த பித்தலாட்டம்..?
மாற்று மத நண்பர்களின் நேரத்தை திருட உமக்கும்,எனக்கும் என்ன உரிமை இருக்கிறது ?
ஒரு முஸ்லிம் உயிரே போனாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டாமா ? நாளை மறுமை நாளில், நீரும் நானும் பதில் சொல்லியாக வேண்டும்.....
நேற்று வாழ்க்கையில் இனி உம்மை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்ககூடாது...என வருந்தி துவா கேட்டேன்...ஆனால்... ஏன்... இந்த பித்தலாட்டதிற்கு முழுவதும் நான்தான் காரணம். ?
நான் தங்களிடம் பழகிய முறையில் ஏதோவொரு தவறு நடந்துள்ளது..புரியவில்லை....எது எப்படி இருந்தாளும் அந்த நண்பர்களுக்கு செய்த துரோகத்திற்கு பரிகாரம் என்ன ?
No comments:
Post a Comment